INDIA: இன்று நடைபெறுகிறது இந்தியா கூட்டணியின் பரப்புரை குழுவின் 2வது கூட்டம்!

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணி அமைத்துள்ளது எதிர்க்கட்சிகள். இந்தியா கூட்டணி கட்சிகள் இதுவரை மூன்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளனர். இம்மாதம் தொடக்கத்தில் மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.
மும்பையில் நடந்த இந்தியா கூட்டணியின் 3வது கூட்டத்தில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் பரப்புரை குழு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா கூட்டணியின் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம்டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் வரும் 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பரப்புரை குழுவின் 2வது கூட்டம் இன்று நடைபெறுகிற உள்ளது. பரப்புரை கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதையடுத்து ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டங்களில் அக்டோபர் 2ஆம் தேதி தொலைநோக்கு அறிக்கை வெளியிடுவது குறித்தும், சென்னை, பாட்னா, நாக்பூர், டெல்லி, கவுகாத்தியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
அக்டோபர் 2-ஆம் தேதி தொலைநோக்கு அறிக்கை வெளியிடுவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டங்கள் சென்னை, பாட்னா, நாக்பூர், டெல்லி, கவுகாத்தி ஆகிய நகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்துவது பற்றி இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.