INDIA: வரும் 13ம் தேதி “இந்தியா” கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம்!

INDIA Alliance

இம்மாதம் தொடக்கத்தில் மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமில்லாமல், மும்பையில் நடந்த இந்தியா கூட்டணியின் 3வது கூட்டத்தில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் முதலமைச்சர் முக ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால், தேஜஸ்வி யாதவ், லல்லன் சிங்  ஹேமந்த் சோரன், சஞ்சய் ராவத், அபிஷேக் பானர்ஜி, ராக்வத் சத்தா, தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா உமர் அப்துல்லா இடம்பெற்றனர்.

மேலும், மெகபூபா முப்தி, டி.ராஜா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் இந்திய கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் வரும் 13ம் தேதி இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடுகளை இறுதி செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்.18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூடுகிறது. இதுபோன்று, ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் நாட்டின் பெயர் மாற்றம் உள்ளிட்டவையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்