கொரோனா அச்சறுத்தல் மத்தியில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா முதலிடத்தில் வந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதனிடையே பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் 69 சதவிகிதம் அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அன்று பெட்ரோல் மீதான வரியை ரூ.10, டீசல் மீதான வரி ரூ.13 என உயர்ந்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 64%, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி 63%, இங்கிலாந்தில் 62% பெட்ரோல், டீசல் மீது வரிவிதிப்பாக உள்ளது.
இதையடுத்து ஸ்பெயினில் 53%, ஜப்பானில் 47%, கனடாவில் 33%, அமெரிக்காவில் 19% வரிவிதிப்பு உள்ளது. இந்த வரிவிதிப்பு மூலம் அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ஏப்ரலை தவிர்த்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மார்ச் மாதம் ஏற்றப்பட்ட வரி உயர்வால் அரசுக்கு ரூ.39 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் மத்திய அரசுக்கு ரூ.2 லட்ச கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…