Categories: இந்தியா

மத்திய பிரதேசம் பெயரில் ஐபிஎல் அணி! மகளிருக்கு மாதம் ரூ.1,500 – காங்கிரஸ் வாக்குறுதி வெளியீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதியையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் கவனம் வாந்தவையாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பு, வாக்குறுதி உள்ளிட்டவை வெளியிட்டு வருகின்றனர். இந்த 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம் மாநில தேர்தல் குறிப்பாக பார்க்கப்படுகிறது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 14ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு சட்டப்பேரவை தேர்தலுக்காக 64,532 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிச. 3ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய பிரதேசத்தில் இப்போது சவுஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கே கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் அங்கு ஆட்சியைக் கைப்பற்றுவதில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.  இதற்கிடையே, 230 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது.

இந்த சூழலில் தலைநகர் போபாலில் காங்கிரஸ் மாநில தலைவர் கமல்நாத் சட்டப்பேரவை தேர்தல் (வாக்குறுதி) அறிக்கையை இன்று வெளியிட்டார். இந்த தேர்தல் வாக்குறுதியில். மத்திய பிரதேசத்தின் பெயரில் தனி ஐபிஎல் அணி உருவாக்கப்படும். அனைத்து மக்களுக்கும் ரூ.25 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். 27% ஓபிசி ஒதுக்கீடு, விவசாயிகளின் ரூ.2 லட்சத்துக்கு மேல் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய பிரதேசத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.5,00க்கு வழங்கப்படும்.  பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்பட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது. மொத்தம் 106 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் முதல் பெண்கள், பழங்குடியினர் மற்றும் ஓபிசிகள் வரை அனைத்து வகுப்புகள் மற்றும் பிரிவுகள் அடங்கிய தொடர் வாக்குறுதிகள் உள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

6 minutes ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

34 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago