ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
இந்த தாக்குதலுக்கான சவாலை எவ்வாறு மேற்கொண்டோம் என ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஸ்டீவ் பாஷாம் தனது அனுபவத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பகிர்ந்து கொண்டார்.

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது. ஆம், அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (இந்திய நேரப்படி அதிகாலை 4:10 மணி முதல் 4:35 மணி வரை) ஈரானின் 3 அணு ஆயுத தளங்களை 7 B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் தாக்கியது. அதன்படி, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் திட்டத்தை மறைக்க அமெரிக்கா ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது. அட ஆமாங்க.., தாக்குதலுக்கு எந்த அவசரமும் காட்டவில்லை. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு வாரங்களில் போர் குறித்து ஒரு முடிவை எடுப்பதாக கூறியிருந்தார். ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா என்ற கேள்விக்கு “நான் அதைச் செய்யலாம், நான் அதைச் செய்யப் போவதில்லை என்று சூசகமாக தெரிவித்திருந்தார்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்று பெயரிட்டது. அதன்படி, ஈரான் பூமிக்கு அடியில் அமைத்துள்ள அணுசக்தி மையங்களின் மீது தாக்குதல் நடத்திய பிறகு, அமெரிக்காவின் ‘B2 Stealth Bomber’ போர் விமானங்கள் 37 மணி நேரம் பயணித்து மீண்டும் வைட்மேன் விமானப்படை தளத்தை வந்தடைந்தன. ஆனால், இந்த 36 மணிநேர தொடர்ச்சியான விமான பயணத்திற்கு விமானிகளுக்கு ஒரு பெரிய சவாலான காலமாகும்.
தாக்குதலுக்கு முன்பு, ஜூன் 20 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் அமெரிக்காவின் வைட்மேன் விமானப்படை தளத்திலிருந்து B-2 குண்டுவீச்சு விமானம் புறப்பட்டது. இந்த விமானம் சுமார் 37 மணி நேரம் இடைவிடாமல் பறந்தது மற்றும் நடுவானில் பல முறை எரிபொருள் நிரப்பியதாக கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் சவாலை எவ்வாறு மேற்கொள்கிறோம் என ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஸ்டீவ் பாஷாம் தனது அனுபவத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பகிர்ந்து கொண்டார். இந்த விமானத்தில் மைக்ரோவேவ், ரசாயன கழிப்பறைகள் மற்றும் சாய்வு இருக்கைகள் பொருத்தப்பட்ட அதிநவீன காக்பிட் உள்ளதாம். இந்த மாதிரியான தாக்குதலுக்கு முன்னர் விமானிகளுக்கு தூக்க மேலாண்மை, மன அழுத்தக் கட்டுப்பாடு மற்றும் நீரேற்றம் ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்துடன் தானியங்கி பைலட் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளும் விமானிகளின் சுமையை சிறிது குறைக்கின்றன .உணவுகள் மற்றும் அவை செரிமானத்தை எவ்வாறு மெதுவாக்குகின்றன அல்லது வேகப்படுத்துகின்றன என்பதை அறிய விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு இரசாயன கழிப்பறை கொண்ட விமானத்தில் இது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
முக்கிய உணவு முறையில், கோதுமை ரொட்டியில் வான்கோழி சாண்ட்விச்-கள், சீஸ் கிடையாது என்று அவர் கூறினார். B-2 எரிபொருள் நிரப்பாமல் 6,000 கடல் மைல்கள் பறக்க முடியும், அதை தாண்டியும் பயணங்களுக்கு நடு-வான எரிபொருள் நிரப்புதல் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் கடிமான சூழ்நிலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், விமானியின் காக்பிட்டில் இருக்கைகளுக்குப் பின்னால் ஒரு சிறிய பகுதி உள்ளது, அங்கு விமானிகள் ஒரு கட்டிலில் படுக்க முடியும். அத்துடன் சூரியகாந்தி விதைகள் உண்ணுவதால் சிலருக்கு விழிப்புடன் இருக்க உதவுகின்றன” என்று அவர் கூறியிருக்கிறார்
இந்த பணியில் ஈடுபட்டிருந்த B-2 விமானிகளில் ஒருவர் ஒரு பெண் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹியூசெத் கூறியிருக்கிறார். B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் தளங்களில் 30,000 பவுண்டுகள் (14,000-கிலோ) GBU-57 குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. அமெரிக்கா GBU-57 பதுங்கு குழி அழிப்பாளரைப் பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025