பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் இயற்றிய சட்டத்திற்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.
பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை டெல்லி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என சட்டம் ஏற்றிய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே, பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்று மேற்கோள்காட்டி பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தனித்தனியாக சட்டங்களை இயற்றியிருந்தனர்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும் வகையில் இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்கள் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்று இருந்தது. சில மாநிலங்களில் சிறை தண்டனை, அபராதம் என விதிக்கப்பட்டது. அதாவது, பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் என பொதுமக்களுக்கு இடையூறு மேற்கொள்ளும் வகையில் பிச்சை எடுப்பது என்பது கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர்கள் விருப்பத்தின் பெயரில் பிச்சை எடுப்பதில்லை, சூழ்நிலை காரணமாக தான் இத்தைகைய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே, பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாக அறிவிப்பது என்பது அவர்களை மேலும் அழுத்தம் தர கூடியவையாக மாறும் என பல்வேறு பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த வழக்குகளை விசாணைக்கு உச்சநீதிமன்ற ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…