Rahulgandhi, Former Congress Leader - Tamilnadu Chief minister MK Stalin [File Image]
மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து ராகுல்காந்தியை வயநாடு எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு ராகுல்காந்தியின் 2 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவு வெளியானது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தால், மீண்டும் ராகுல்காந்திக்கு எம்பி பதவி வழங்க வேண்டும். அவரது தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் மக்களவை செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்ராகுல் காந்தியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தாலும் மீண்டும் எம்.பி பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. அவரை தகுதி நீக்கம் செய்யும் போது காட்டிய அவசரம் ஏன் இப்போது இல்லை? ராகுல்காந்தி நாடாளுமன்றத்திற்குள் வருவதை கண்டு பாஜக பயப்படுகிறதா? எனவும் அதில் கோள் எழுப்பியுள்ளார். .
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…