டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களின் சம்பளம் 2,000 அதிகரித்துள்ளது.
இருப்பினும், 2024-25ஆம் ஆண்டில் கூடுதலாக ரூ.10க்கு மேல் வசூலித்த என்கிற குற்றச்சாட்டுகளில் சிக்கிய 451 கடைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.1,000 மட்டுமே ஊதிய உயர்வாக வழங்கப்படும். எம்.ஆர்.பி தொகைக்கு மேல் கூடுதலாக வசூலிக்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வு தொகை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஊதியத்தில் சேர்க்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குள் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கையில் தெரிவித்தப்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கை அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டு, ஊதிய உயர்வு நடைமுறையை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு
அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை pic.twitter.com/BhqvXmpOkD
— Kannan Jeevanantham (JK) (@Im_kannanj) July 14, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025