Chandrayaan 3 [Image source : ISRO]
சந்திராயன்-3யானது சந்திராயன்-2வில் இருந்து எப்படி வேறுபடுகிறது என இஸ்ரோ தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22இல் இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை கொண்டிருந்தது. விக்ரம் எனும் லேண்டர் சீரான தரையிறக்கத்தை செய்யத் தவறிய நிலையில், பணியின் மற்ற அம்சங்கள் வெற்றிகரமாக இருந்தன.
இஸ்ரோவானது, சந்திரயான்-2வின் விக்ரம் லேண்டரை தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலவின் மேற்பரப்பில் ஒரு மென்மையான சமவெளியில் தரையிறக்க இலக்கு வைத்து இருந்தது. ஆனால் குறிப்பிட்ட சற்று தொலைவுக்கு முன்பு லேண்டருடனான தொடர்பை இழந்தது. மென்பொருள் கோளாறால் சந்திரயான்-2 திட்டம் அப்போது தோல்வியடைந்தது.
இஸ்ரோவின் கூற்றுப்படி, விக்ரம் லேண்டரின் இயல்பான செயல்திறன் 2.1 கிலோமீட்டர் உயரம் வரை பூமியில் உள்ள மிஷன் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தொடர்பு இருந்தது. அதன் பிறகு பூமிக்கும் லேண்டருக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கடந்த 2019 செப்டம்பர் 10இல் சந்திரயான்-2 ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக இஸ்ரோ ஒரு புதுப்பிப்பை வெளியிட்டது. பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர், விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளானபோது விக்ரமுடன் சேர்ந்து அழிக்கப்பட்டது. இருப்பினும், சந்திரயான்-2 ஆர்பிட்டர் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
சந்திரயான்-2க்கு அடுத்ததாக சந்திரயான்-3 பயணம் வரும் ஜூலை 14இல் விண்ணில் துவங்க உள்ளது. இரண்டு பயணங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை தான். சந்திரயான்-2 ஒரு சுற்றுப்பாதையை உள்ளடக்கியது, ஆனால் சந்திரயான் -3 எந்த சுற்றுவட்ட பாதையையும் குறிப்பிட்டு செல்லாது.
சந்திரயான்-2 போலவே, சந்திரயான்-3யும் புவிசார் செயற்கைக்கோள் ஏவுகணை வாகனமான மார்க்-IIIஐ பயன்படுத்தி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சந்திரயான்-2 தோல்வி என கூறினாலும், அதன் பணி நோக்கங்களில் 90 முதல் 95 சதவீதம் வரை நிறைவேற்றப்பட்டுள்ளது என இஸ்ரோ கூறியுள்ளது.
சந்திராயன் 3யானது, சந்திர சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் நிறமாலை மற்றும் துருவ அளவீடுகளை புரிந்து கொண்டு, அதனுடைய சுற்றுப்பாதையை தேர்ந்தெடுத்து பூமியை பகுப்பாய்வு செய்யும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…