Chandrayaan-3 Mission [File Image]
சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 70 கி.மீ தொலைவில் இருந்து லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி (நாளை) நிலவில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் செய்யும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அதற்கு தற்போது இஸ்ரோ விளக்கமளித்துள்ளது. தற்போது, சந்திரயான்-3 செயல்பாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி, நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று அறிவித்துள்ளது.
மேலும் தனது X தள பதிவில், ஆகஸ்ட் 19, 2023 அன்று சுமார் 70 கிமீ உயரத்தில் இருந்து லேண்டர் பொசிஷன் டிடெக்ஷன் கேமரா (LPDC) மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் இஸ்ரோ நிறுவனம் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறது. LPDC படங்கள் லேண்டர் தொகுதி அதன் தரையிறங்கும் (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) நிர்ணயம் செய்வதன் மூலம் அவற்றை உள் நிலவு குறிப்பு வரைபடத்துடன் பொருத்துகிறது.
இதனிடையே, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது. நாளை மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும். இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப், இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…