ஜே.இ.இ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தது. பின்னர் முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர 7 மாநில அரசுகள் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சில மாநில முதல்வர்கள் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து தேர்வுகளை நடத்த எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், ஜே.இ.இ, நீட் தேர்வு தேதிகள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இறுதி செய்யப்பட்டுள்ளது. முழு கல்வியாண்டையும் வீணடிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீட் தேர்வுக்கு 7.5 லட்சம் பேரும், ஜேஇஇ-க்கு 10 லட்சம் பேரும் அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்த 8.58 லட்சம் மாணவர்களில் 7.5 லட்சம் பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர். 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதிகளவு மாணவர்கள் ஒரேநாளில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருப்பது, அவர்கள் தேர்வு எழுதுவதை விரும்புவதே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…