இதை ரத்து செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சிரோமணி அகாலி தளம் தலைவர்கள் இன்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
சீக்கியர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கோரி காலிஸ்தான் என்ற அமைப்பு 1995-ல் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த்சிங்கை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் கொடூரமாக படுகொலை செய்தது. இதற்காக தீவிரவாதி ரஜோனாவுக்கு கடந்த 2007ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. எனவே, ரஜோனாவை கடந்த 2012-ல் இவரை தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் சீக்கியர் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று ரஜோனா தூக்கிலிடப்படவில்லை
இந்நிலையில் சீக்கிய குரு குருநானக்சிங்கின் 550வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு ரஜோனாவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால்இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் ரஜோனாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யப் போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறையில் அண்மையில் தீவிரவாதி ரஜோனா, தமது தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். பின்னர், குருத்வார பிரபந்த கமிட்டி நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று தீவிரவாதி ரஜோனா தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில் இன்று பஞ்சாபை சேர்ந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையிலான குழுவினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்..
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…