நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் மஹாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை போலீசார் விசாரித்த விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும், மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறினார்.
இதனால், சிவசேனா கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மும்பை பாந்திரா பகுதியில் உள்ள கங்கனா பங்களாவில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் நடந்துள்ளதாக கூறி மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.
நோட்டீஸ் குறித்து 24 மணி நேரத்தில் பதிலளிக்க கெடுவும் கொடுக்கப்பட்டது. ஆனால், கங்கனா பதிலளிக்கவில்லை இதனால், நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படுவது குறித்து நோட்டீஸ் ஒட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடித்தனர்.
இந்நிலையில், கங்கனா மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது பங்களா வீட்டில் இடிப்பு பணியை மேற்கொள்ள தடை விதிக்க மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மாநகராட்சி இடிப்பு பணிக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், கங்கனா ரணாவத் இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கை செப்டம்பர் 22-ம் தேதி வரை ஒத்திவைத்தது மும்பை உயர் நீதிமன்றம்.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…