துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் , ஒரு குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்து நடத்த அருகில் உள்ள கொண்டட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, நேற்று விபத்து நடந்தபோது அந்த கிராமத்தை சார்ந்தவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணியில், போலீசார், தீயணைப்பு வீரர்கள், தேசிய மீட்பு படை ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் தனிமைபடுத்தி கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், விமானத்தில் பயணம் செய்த பிற பயணிகள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்கள், கொரோனா பரிசோதனையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…