பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறதா நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், கரோனில் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் அந்த மாத்திரை, ஸ்வாசரி எனும் ஆயுர்வேத மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கரோனா நோய் குணமடையும் என்றும் அறிவித்திருந்தார்.
ஆனால், இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. ககொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை தவறான முறையில் வழிநடத்தும் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தனது ட்வீட்டர் பக்கத்தில் பாபா ராமதேவுக்கு எச்சரிக்கை விடுத்தது ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கரோனில் மருந்து கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா என்பதை ஜெய்ப்பூரில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம் கண்டுபிடிக்கும்.
பாபா ராமதேவுக்கு எச்சரிக்கை விடுத்தது சொல்கிறேன், மகாராஷ்டிராவில் கரோனாவைக் குணப்படுத்தும் போலியான மருந்துகளை விற்க அனுமதிக்கமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…