West Bengal CM Mamata banerjee [File Image]
மேற்கு வங்கம்: மருத்துவப்படிப்புக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று அதன் மூலம் இந்தியா முழுக்க ஒரே கட்டமாக மருத்துவ கல்லூரி சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நீட் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு ஆரம்பம் முதலே மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்து வருகிறது.
அண்மையில், நீட் தேர்வில் நேர்ந்த பல்வேறு குளறுபடிகள், அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் ஆகியவை நீட் தேர்வுக்கு எதிரான முழக்கத்தை மேலும் வலுவாகியுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தற்போது பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுளார்.
அதில், அண்மையில் நீட் தேர்வில் எழும் குளறுபடிகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குதல், குறிப்பிட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள், முழுமையான நீட் தேர்வு பற்றிய கவனம் தேவையான ஒன்றாகவும், சில தீவிரமான பிரச்சினைகளாகும் உள்ளது.
இத்தகைய நிகழ்வுகள் இந்த மருத்துவப் படிப்புகளில் சேர்க்கையை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் இலட்சியத்தை பாதிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் நாட்டின் மருத்துவக் கல்வியின் தரத்தை பாதிக்கின்றன.
2017க்கு முன்பு வரையில் அந்தந்த மாநிலங்கள் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை நடத்தியபோது எந்த பிரச்சனையும் எழுந்ததாக தெரியவில்லை. ஆனால் தற்போது பொது நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் எழுகின்றன.
மாநில அரசுகள் தோராயமாக ஒரு மருத்துவ மாணவருக்கு கல்வி மற்றும் பயிற்சிக்காக ரூ.50 லட்சத்துக்கு மேல் செலவிடுகிறது. எனவே, மருத்துவ மாணவர்களை நுழைவுத்
தேர்வு மூலம் தேர்வு செய்ய மாநில அரசுக்கு போதிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
மாநில அரசுகளின் தலையீடு இல்லாமல் மத்திய அரசு கட்டுப்பாட்டில் நடைபெறும் நீட் தேர்வு முறையானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டின் மாநில கூட்டாட்சி கட்டமைப்பின் உணர்வை மீறுவதாக உள்ளது.
நீட் நுழைவுத்தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயிற்சி கூடங்களில் சென்று பயனடையும் வகையில் உள்ளது. இத்தகைய பல்வேறு காரணங்களை பட்டியலிட்டு நீட் தேர்வை ரத்து செய்து மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…