ரஞ்சன் கோகாயைப் போன்ற வெட்கமற்ற நீதிபதியை நான் பார்த்ததில்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடுமையாக விமர்சித்து உள்ளார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமைய நீதிபதியாக பதிவி வகித்து அண்மையில் ஓய்வுப்பெற்ற நிலையில் ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார் .
தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.இதை அடுத்து அவரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து காலியான அந்த இடத்திற்கு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சன் கோகாயின் இந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்களும் ,விமர்சனங்களும் பரந்த நிலையில் இதற்கு காரணம் அவர் அயோத்தி பிரச்சனை, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரின் நியமனம் தொடர்பாக கடுமையாக விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் நான் 20 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 20 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறேன். என் நீண்ட அனுபவத்தில், ரஞ்சன் கோகாய் போன்ற கொஞ்சமும் வெட்கமற்ற, ஒரு இழிவான நீதிபதியை தான் பார்த்ததில்லை. பாலியல் வக்கிரம் நிறைந்த இவரிடம் இல்லாத தீய குணங்கள் என எதுவுமில்லை” என தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…