mukesh ambani [Image source : Dtext
இந்தியாவின் பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு ரூ.400 கோடி பணம் கேட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அதுவும், ஒரே மின்னஞ்சலில் இருந்து பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு 4 நாட்களில் 3வது கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு, அக்டோபர் 27ம் தேதி முகேஷ் அம்பானி-க்கு ஈமெயில் மூலம் ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல் எச்சரிக்கை வந்தது. இந்த மிரட்டலை தொடர்ந்து, மும்பையின் காம்தேவி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 387 மற்றும் 506 (2) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன்.!
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 28ம் தேதி 2வது ஈமெயில் 200 கோடி ரூபாய் கேட்டு அதே கொலை மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது பணத்தை உயர்த்தி மீண்டும் முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது முறையாக ரூ.400 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை கூறுகையில், இதற்கு முன்பு 2 கொலை மிரட்டல் எச்சரிக்கையை விடுத்தவர் தான் 3வது முறையும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 மிரட்டல்களும் ஒரே இமெயில் ஐடியில் இருந்து வந்துள்ளது என்றுள்ளனர். மேலும், முகேஷ் அம்பானி தொகையை செலுத்தாவிட்டால் சுட்டுக்கொல்லப்போவதாக முந்தைய மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டது. அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே ஐடியிலிருந்து ஷதாப் கான் என அடையாளம் காணப்பட்ட நபரால் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இமெயில் ஐடி பெல்ஜியம் நாட்டுக்கு டிரேஸ் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த 25 ஆண்டுகளில், நமது இந்தியாவை நாம் செழிப்பாக மாற்ற வேண்டும்.! பிரதமர் மோடி பேச்சு.!
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானிக்கு வந்த அந்த மிரட்டல் மின்னஞ்சலில், ரூ.400 கோடி பணம் கேட்டுள்ளதாகவும், என்னைக் டிராக் செய்யவும், கைது செய்யவும் காவல்துறையால் முடியாது.
எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், ஒருவர் போதும் உங்களை கொல்ல என்று எச்சரிக்கை விடுத்து இருந்ததாக காவல்துறை தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனிடையே, நாளை மும்பையில் ஜியோ வோல்டு பிளாசா என்னும் பிரமாண்ட ஷாப்பிங் மால் திறக்கப்பட உள்ள நிலையில், முகேஷ் அம்பானிக்கு ஒரு வாரத்தில் 3 கொலை மிரட்டல் வந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…