Former Chief Minister Siddaramaiah ( Image Source : PTI )
எனது தந்தை சித்தராமையாதான் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் என மகன் யதீந்திர சித்தராமையா பேட்டி.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. கர்நாடகாவில், ஆட்சி அமைக்க 113 இடங்கள் போதும் என்ற நிலையில், 120க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிட்ட முடிவின்படி 100 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக 68 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 19, பிறர் 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஒவ்வொரு சுற்றை எண்ணி முடித்தபின் அதிகாரிகள் அளிக்கும் அதிகாரபூர்வ முடிவு தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரின் மகன்யதீந்திரா சித்தராமையா, காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற நாங்கள் எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலன் கருதி எனது தந்தை மீண்டும் முதல்வராக வேண்டும்.
ஒரு மகனாக நான் நிச்சயமாக அவரை முதலமைச்சராகப் பார்க்க விரும்புகிறேன். அவரது கடந்த ஆட்சியில் மிகச்சிறந்த ஆட்சி இருந்தது. இந்த முறையும் அவர் முதல்வராக இருந்தால் ஊழல் மற்றும் தவறான ஆட்சியின் போக்கு களையப்படும் எனவும் யதீந்திர சித்தராமையா பேட்டியளித்துள்ளார்.
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…