14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

மே 9 அன்று நடந்த சக்திவாய்ந்த வெடிப்பில், குண்டு துளைக்காத வாகனம் ஒன்று சேதமடைந்ததுடன், உள்ளே இருந்த 14 வீரர்களும் கொல்லப்பட்டனர்.

Balochistan

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார் பலூச், பாகிஸ்தானில் இருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் எக்ஸ் தள பதிவில் பலூசிஸ்தான் இனி பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இல்லை எனக் குறிப்பிட்டு, இனியும் உலகம் இந்த விவாகரத்தில் அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பலுசிஸ்தானின் முக்கிய தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்து தாங்கள் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை (POK) காலி செய்யுமாறு இந்தியா எடுத்த முடிவுக்கு பலுசிஸ்தான் குடியரசின் முழு DID ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பலூச் விடுதலை இராணுவம் (BLA), “ஆபரேஷன் ஹெரோஃப்” என்ற இராணுவப் பயிற்சியின் போது, ​​பாகிஸ்தான் இராணுவத்தின் 14 வீரர்களைக் கொன்றதற்குப் பொறுப்பேற்றுள்ளது. அதாவது , கடந்த மே 9ம் தேதி அன்று நடந்த இந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில், குண்டு துளைக்காத வாகனம் ஒன்று சேதமடைந்ததுடன், மேலும் உள்ளே இருந்த 14 வீரர்களும் கொல்லப்பட்டனர்.

பஞ்ச்கூர் மாவட்டத்தில் உள்ள மஜ்பூராபாத்தின் போனிஸ்தானில் இந்தத் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தான் இராணுவத் தொடரணி மீதான தாக்குதலின் வீடியோவை நேற்றிரவு BLA வெளியிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்