“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!
என்னுடைய வீட்டை விட்டு ஏதுமில்லாமல் நான் வெளியேறியபோது எனக்கு துணையாக நின்றவர் கெனிஷா ஃபிரான்சிஸ் என்று நடிகர் ரவி மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது பேசுபொருளாகியது.
இருவரும் நெருக்கமாக பழகி வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவிய நிலையில், ஐசரி கணேஷ் மகள் திருமண நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக பங்கேற்றதை அடுத்து, நடிகர் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
இப்பொழுது, நடிகர் ரவி மோகன் ஒரு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”தற்போது நான் எடுத்த முடிவால் முன்பு எப்போதும் இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன், திருமண வாழ்வை காப்பாற்ற நான் கடும் போராட்டங்களை சந்தித்தேன்.
மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன், குழந்தைகளை அல்ல.. இத்தனை நாட்களாக முதுகில் குத்தப்பட்டேன். இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன், குழந்தைகளை பார்க்க விடாமல் பவுன்சர்கள் தடுக்கின்றனர். பொன் முட்டையிடும் வாத்தாகவே நான் பார்க்கப்பட்டேன், ஒரு கணவனாக நான் மதிக்கப்படவில்லை.
கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை உருவாக்கியுள்ளேன், கடந்த கால திருமண வாழ்க்கையை மலிவான அனுதாபம் தேடுவதை அனுமதிக்க முடியாது. மனைவியால் உடல், மனம் மற்றும் உணர்வு ரீதியாக கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன்.
பணரீதியாக ஆதாயம் அடைய என் மகன்களை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆர்த்தியுடனான எனது திருமண வாழ்க்கையை தொடர எவ்வளவோ முயன்றேன். 5 ஆண்டுகளாக எனது வருமானம் அனைத்தையும் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே அனுபவித்து வந்தனர், என்னை கணவராக அல்லாமல் பொன் முட்டையிடும் வாத்தாக ஆர்த்தியின் குடும்பம் பயன்படுத்தியது.
இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தேன், எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. என்னையும், கெனிஷாவையும் விமர்சித்து பேசுவது வருத்தமளிக்கிறது. அவர் என் வாழ்க்கையின் அழகான துணை. வாழ்க்கையில் சந்தித்த சட்ட, உணர்வு, நிதி ரீதியான எல்லா பிரச்னைகளிலும் என்னுடன் இருந்தவர். என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா. என்னுடைய கதையை கேட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசகராக இல்லாமல், தோழியாக இருந்து உதவினார்