கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரானது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதன்பின்னர்,மத்திய பட்ஜெட்டைபிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள்வெளியாகின.
இதனையடுத்து,பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 11 ஆம் தேதியில் நிறைவடைந்தது.கொரோனா பரவல் காரணமாக முதல் அமர்வு காலையில் மாநிலங்களவையும்,மாலையில் மக்களவையும் செயல்பட்டன.
இந்நிலையில்,மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது.தற்போது,கொரோனா பரவல் குறைந்து காணப்படுவதால் நாடாளுமன்ற இரு அவைகளும் வழக்கம் போல் காலை 11 மணிக்கு ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளது.
அதன்படி,பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும்,உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைப்பு,உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டதில் தாமதம்,அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக அமளியில் ஈடுபட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வானது ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…