PMModiNDA MeetDelhi [Image-ET]
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு சமூகத்தினர் இடையே வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விரிவான விவாதத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்காத காரணத்தால், நாடாளுமன்ற மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அவர் பேசுகையில், மணிபூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை. மணிப்பூர் சம்பவத்தில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டது. பாரத மாதாவை அவர்கள் கொன்று விட்டார்கள் என பல்வேறு காட்டமான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இரானி, தேச வரலாற்றில் முதன்முறையாக, ‘பாரத் மாதா’ கொலையைப் பற்றி ஒருவர் பேசினார். அதற்கு காங்கிரஸ் தொடர்ந்து கைதட்டுகிறது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். என்று கூறினார்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித சித்தாந்தமும் கிடையாது. சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வது பாஜக, வெறுப்புணர்வை தூண்டி அரசியல் செய்வது காங்கிரஸ் என்று கூறினார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதனால் நேற்று நாடாளுமன்ற மக்களவை பெரும் பரபரப்பாக இருந்தது. இரண்டு நாள் விவாதம் முடிந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். இன்று பிரதமர் மோடி பதிலுரை அளித்த பின்பு குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இதற்கிடையில், பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பதிலுரை ஆற்ற உள்ளார்.
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று…
குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு…
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச…
வாஷிங்டன் : அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக…