[FILE IMAGE]
எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரான (I.N.D.I.A) குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கருத்து.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவது குறித்து நேற்று மற்றும் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக, ஆர்.ஜே.டி, ஜே.டி.எஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றனர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத், முக ஸ்டாலின், சரத்பவார், அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதுமட்மில்லாமல், ஒன்றாக இணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயரும் வைத்து அறிவிக்கப்பட்டது.
அதாவது, பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘I.N.D.I.A’ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைத்து அறிவிக்கப்பட்டது. இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள ஓர் அணியில் திரண்டு உள்ள எதிர்க்கட்சிகள், தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரான (I.N.D.I.A) குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், நமது நாகரிக மோதல்கள் இந்தியாவையும் பாரதத்தையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயர் வைத்தனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட பாடுபட வேண்டும். அதோடு நம் முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக போராடுவோம், பாரதத்திற்காக பா.ஜ.க போராடும் என கூறியுள்ளார். மேலும், தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில், அதாவது பாயோவில் ‘அசாம் முதலமைச்சர் இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘அசாம் முதலமைச்சர் பாரத்’ என மாற்றம் செய்துள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…