வரும் ஜூலை 26-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார்.
இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள் அனைத்து மூடப்பட்டது. ஊரடங்கு தொடந்து நீடிக்கப்பட்டு கொண்டே செல்வதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சில நுழைவு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் தேர்வுகள் நடைபெறுமா..? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், மே மாதம் மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். அதில், வரும் ஜூலை 26-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வு நடைபெறும் என அறிவித்தார். மேலும் JEE முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் என அறிவித்தார்.
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…
சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…