ஜாமீனுக்கு எதிர்ப்பு -நித்தியானந்தா பதில் அளிக்க உத்தரவு

Published by
Venu
  • நித்தியானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்த மனு தொடர்பாக நித்தியானந்தா பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நித்தியானந்தா மீது அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.இதனையடுத்து பல நிபந்தனைகளுக்கு அடுத்து நித்தியானந்தாவிற்கு ஜாமீன் அந்த வருடம் ஜூன் மாதம் வழங்கியது கர்நாடகா உயர்நீதிமன்றம்.

இந்நிலையில் அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிறப்பு மனுதாக்கல் செய்தார்.அதாவது அவர் தாக்கல் செய்த வழக்கில்,நித்தியானந்தா மீது ராம் நகர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகிறது.நிபந்தனை ஜாமீனில் வெளியாகியுள்ள நிலையில்,50-க்கும் மேற்பட்ட விசாரணையில் அவர்  ஆஜராகவில்லை.நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்ப்பட்டுள்ளார்.எனவே நீதிமன்ற   உத்தரவை மதிக்காததால் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்  டி .குன்கா  அமர்வில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த அமர்வு,இந்த வழக்கு தொடர்பாக   ஒரு வாரத்தில் நித்தியானந்தா  மற்றும் சிபிசிஐடி பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி  உத்தரவு  பிறப்பித்தனர். 

 

Published by
Venu

Recent Posts

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

47 seconds ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

31 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

2 hours ago

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

3 hours ago