பொறுப்பற்ற நடத்தை கொண்டோரை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது.
இந்தியா முழுவதும் ஒருநா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அரசு பல விதித்தாலும், பலர் இந்த விதிமுறைகளை மீறி நடக்கின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், ‘பொறுப்பற்ற நடத்தை கொண்டோரை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது. மக்கள் சட்டத்தை பின்பற்றாததே, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு முழு காரணம். ஊரடங்கு தளர்வு அளித்தவுடன் பல இடங்களில், ஒரு மைல் தொலைவுக்கு முண்டியடித்துக் கொண்டு நின்று மதுபாட்டிலை வாங்கினர்.
விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் கொண்டாட சொல்லி அறிவுறுத்தியும், அனைவரும் கடைக்குச் சென்று கும்பலோடு கலந்து பொருட்களை வாங்கி கொண்டாடினார்கள். இவ்வாறு விதிமுறைகளை மீறுவதால், நோய்தொற்று அதிகமாகிறது. இப்படி நோய் பரவுவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் பணம் செலவிட வேண்டியுள்ளது. மேலும், மருத்துவர், செவிலியர், மருந்து, வென்டிலேட்டர், மருத்துவமனை, உணவு என தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் சட்ட விதிகளை மீறுபவர்கள் எப்படி இலவச சிகிச்சை கேட்க முடியும்? விதியை மீறுவோர் எதற்காக அரசிடம் வருகிறார்கள்? பணம் கட்டி சிகிச்சை பெற வேண்டியதுதானே.’ என காட்டமாக பேசியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…