ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 42% உயர்வு.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த கொரோனா பாதிப்பு பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். அந்த வகையில் விமானப் போக்குவரத்துத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிய நிலையில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 63 சதவீதம் வரை குறைந்து இருந்தது. தற்போது உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக விமான பயணிகள் இருக்கை கட்டுப்பாடு 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கடன் தர மதிப்பீட்டு முகமையான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 29 முதல் 30 லட்சமாக இருக்கும் என்றும், கடந்த மே மாதத்தின் 19.8 லட்சம் பயணிகளுடன் ஒப்பிடும்போது 41 முதல் 42 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிறுவனங்களின் இருக்கை கொள்ளளவும் கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிடும்போது 46 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, கொரோனா தொற்று குறைந்து வருவதை நிரூபிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…