வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றாலொழிய வீடு திரும்ப மாட்டோம் என உறுதியாக இருக்கும் விவசாயிகள், இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த அமைப்புகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் 8 முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்தது.
இந்நிலையில் இன்று 9-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்கிடையில் விவசாயிகள் பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து இருந்தது. இந்த குழுவில் இடம்பெற்றிருந்த பாரதிய கிசான் சங்கம் தலைவர் பூபேந்தர் சிங் மான் திடீரென இந்த குழுவில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எப்போதும் விவசாயிகள் பக்கம் இருக்கத்தான் விரும்புகிறேன். எனவே உச்சநீதிமன்ற குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றாலொழிய வீடு திரும்ப மாட்டோம் என உறுதியாக இருக்கும் விவசாயிகள், இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு முன்பாக ஆஜராக மாட்டோம் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறவிருக்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி அவர்கள் கலந்து கொள்கிறார்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…