கொரோனா சிகிச்சை முடிந்த பிறகு குணமடைந்தவர்களுக்கு மூச்சு பிரச்சனை, உடல் வலி போன்ற பின் விளைவுகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும், அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்தார். ஆனால், அவர் குணமடைந்த பிறகு அவருக்கு உடல் வலி இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய உடல் பிரச்சனை தொடர்பாக, கோவிட் -19 தடுப்பு தேசிய பணிக்குழுவின் தலைவர் வி.கே. பவுல் கூறுகையில், ‘ கொரோனா சிகிச்சைக்கு பின்னர் வரும் உடல் மாற்றங்களை மருத்துவர் குழு கவனித்து வருகிறது. கொரோனா சிகிச்சைகள் பிற்காலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.’ என தெரிவித்தார்.
இது குறித்து சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், ‘ கொரோனா தொற்று மற்றும் இறப்பு விகிதம் கடந்த 5 நாட்களில் குறைந்துகொண்டே வருகிறது. ‘என குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையில் உள்ளதாகவும், அதில் ஒன்று மட்டும் அடுத்தகட்ட மனித சோதனைக்கு உட்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், அதன் பெயரை கொரோனா தடுப்பு குழு வெளியிடவில்லை.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…