NDA கூட்டத்தில் கலந்து கொள்ள அரங்கிற்கு வந்தார் பிரதமர் மோடி..!

modi

பிரதமர் மோடியை ஜே.பி.நட்டா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக தலைமையில் என்டிஏ ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 39 கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும் புதிதாக சேர்ந்த கட்சிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கூட்ட அரங்கிற்கு வருகை புரிந்த பிரதமர் மோடியை ஜே.பி.நட்டா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்