Vande Bharat trains [Image Source :file image]
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இன்று (செப்டம்பர் 24ம் தேதி) மதியம் 12:30 மணிக்கு, ஒன்பது வந்தே பாரத் ரயில்களை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்தவும், ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்கவும் பெரிதளவில் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ரயில்கள் உதய்பூர்-ஜெய்ப்பூர், திருநெல்வேலி-சென்னை, ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய வழித்தடங்கள் இடையே இயக்கப்படும். நாட்டில் இதுவரை 25 வழி தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில்களால் நாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 34 ஆக உயரும். இந்த ஒன்பது ரயில்கள் ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய பதினொரு மாநிலங்களில் இணைப்பை பெறுகிறது . இந்த வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கத்தின் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருக்கும் மற்றும் பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…
பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…
சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…