பிரதமர் நரேந்திர மோடி இன்று நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 75-ஆண்டு பொதுச் சபையில் (யுஎன்ஜிஏ) உரையாற்றவுள்ளார்.
கடந்த 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைக்கப்பட்டது. ஐ.நா.வின் முக்கிய நோக்கம் உலக நாடுகளுக்கிடையே அமைதி, நல்லுறவு, பாதுகாப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதே ஆகும்.
இந்த கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுகிறது.கொரோனா காரணமாக தலைவர்கள் பங்கேற்க முடியாத நிலையில் இந்த கூட்டம் மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. அதாவது உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உரையை முன்கூட்டியே வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.இந்த வீடியோ கூட்டத்தில் ஒளிப்பரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஒவ்வொரு நாட்டின் தலைவர்களின் வீடியோக்களும் 15 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது ஐக்கிய நாடுகள் சபை.
இந்தியாவின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் மோடி கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அவர் எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை வலுப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்குவதன் மூலம் கொரோனா நோய்க்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்புக்கு இந்தியாவின் பங்களிப்பை பிரதமர் எடுத்துரைக்க வாய்ப்புள்ளது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…