wedding [Image source : file image ]
திருமணத்திற்கு முந்தைய புகைப்படம் மற்றும் வீடியோ ஷூட்கள் எடுப்பது “பெண்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது” என்று சத்தீஸ்கர் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி டாக்டர் கிரண்மயி நாயக் தெரிவித்துள்ளார்.
கிரண்மயி நாயக் , தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராய்ப்பூரில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில், கிட்டத்தட்ட 25 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் ஒரு வழக்கு நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் நின்றுபோன வழக்கு ஒன்றும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, மனு தாரர் திருமணம் முறிந்த பிறகு, பெண்ணின் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளுக்காக செலவழித்த பணத்தை மணமகன் குடும்பத்தினர் திருப்பி அளித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கிவிட்டதாகவும்” விளக்கினார். முதலில் மணமகன் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்த நிலையில், கமிஷனின் தலையீட்டால், மணமகளின் குடும்பத்தினருக்கு பணம் திருப்பி அனுப்பப்பட்டது, மேலும் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நீக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசிய கிரண்மயி நாயக் ” நமது சமூகத்தில் இந்த கலாச்சாரம் இல்லை என்றும், மக்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள், வீடியோக்கள் எதிர்காலத்திற்கு மிகவும் ஆபத்தானது. எதிர்காலத்தில் எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படலாம்.எனவே , தான் இந்த செய்தியை சமூகத்தில் பரப்ப வேண்டும் என்று நினைத்தேன். பெற்றோர்கள் இது போன்ற நடைமுறையை ஊக்குவிக்க கூடாது” என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…