PriyankaGandhiVadra [File Image]
பாஜக அரசின் ஊழல் பட்டியலை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் பிரியங்கா காந்தியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உரையாற்றினார். அதில் ஆளும் பாஜக ஊழலில் மிதப்பதாக குற்றம் சாட்டினார். பிறகு, அவர் மோசடிகள் குறித்த பட்டியலை படிக்க வந்தபோது, மோசடிகளின் பட்டியலைக் கண்டுபிடிக்கத் தடுமாறினார்.
இறுதியில் அந்தப் பகுதியைத் தவிர்த்து, அதைப் பற்றி பிறகு சொல்கிறேன் என்று பார்வையாளர்களிடம் கூறிவிட்டு தனது உரையை மீண்டும் தொடங்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்களால் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
இதன்பின், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் பிரதமர் தாமதமாக பதிலளித்ததற்காக பிரியங்கா காந்தி விமர்சித்தார். மேலும், குவாலியரில் உரையாற்றிய பிரியங்கா, சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாயை நினைவு கூறும் வகையில் அவரது சாதனைகள் குறித்து பேசினார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…