Categories: இந்தியா

அண்ணன் – தங்கை பாசத்தை பொழிந்த ராகுல், பிரியங்கா.!

Published by
கெளதம்

டெல்லி : ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, ராகுல் காந்த மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர்.

ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறிப்பாக, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான பண்டிகை. ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) என்பது சகோதரர் மற்றும் சகோதரி இடையே உள்ள அன்பையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது.

இந்த பண்டிகையின் போது, சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ‘ராகி’ என்று அழைக்கப்படும் ஒரு கயிற்றை கட்டி, அன்பை வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு, தனது வாழ்த்துகளை சமூக வலைதளமான X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ” ரக்‌ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் – தங்கைக்கு இடையே உள்ள அழியாத அன்பு மற்றும் பாசத்தின் அடையாளம் இந்த பண்டிகை. இந்த பாதுகாப்பு கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுவாக வைத்திருக்கட்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், அவர் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து, பிரியங்கா காந்தியும் தனது எக்ஸ் தள பக்கத்தில் ராகுல் காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “அண்ணனுக்கும் – தங்கைக்கும் இடையிலான வானது ஒரு பூச்செடி போன்றது. அதில் வெவ்வேறு வண்ணங்களில் நினைவுகளும், ஒற்றுமையின் கதைகளும், நட்பும் நிறைந்திருக்கும். அது ஆழமாக்கும் வகையில், அன்பு மற்றும் மனசு விட்டு புரிதலோடு செழித்து வளரும். உங்கள் அனைவருக்கும் இனிய ராக்கி நல்வாழ்த்துக்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஒருவருக்கொருவர் தங்களது அண்ணன் தங்கை பாசத்தை பகிர்ந்து கொண்டனர்.

Published by
கெளதம்

Recent Posts

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

32 minutes ago

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

1 hour ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

2 hours ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

3 hours ago

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

4 hours ago