லடாக் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் .
லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனால், பதற்றத்தைத் குறைக்க 4 முறை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் காரணமாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக குறைந்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றுள்ளார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் ஆகியோர் சென்றனர். இதைத்தொடர்ந்து, லடாக்கில் உள்ள ஸ்டக்னா பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய சாகச நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஒத்திகைகளை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனா தங்களது படைகளை விலகி உள்ளது ஆனால், ஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வதில் சீனா சற்று தயக்கம் கட்டி வருகிறது.
கடந்த ஜூலை 3-ம் தேதி ராஜ்நாத் சிங் லடாக் வருவதாக இருந்தது. ஆனால், பிரதமர் மோடி சென்றதால் ராஜ்நாத் சிங் பயணம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…