ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விஜயநகர மாவட்ட ரயில்வே தண்டவாளத்தில் பையுடன் வீசப்பட்ட ஆண் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொத்தவலசை இன்ஸ்பெக்டர் பி.எஸ்.ராவ் கூறுகையில், கொத்தவலசை ரயில் நிலையத்தில் திங்கள் கிழமை காலை 6 மணியளவில் கைவிடப்பட்ட ஒரு குழந்தை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தையை பார்த்த நபர் பையிலிருந்து எடுத்து பார்த்தபோது அது ஒரு ஆண் குழந்தை என தெரியவந்ததாகவும், இது தொடர்பாக ஒருவர் எங்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அந்த இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த ஆண் குழந்தையை ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும், குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தடுப்பு ஊசி போட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஐபிசி 317 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், குழந்தையாய் ரயில் தண்டவாளத்தில் தூக்கி வீசியது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…