சச்சின் பைலட்டிடம் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்திய ப.சிதம்பரம்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாடுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சிபி ஜோஷி கடந்த செவ்வாய்க்கிழமை தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். இந்த தகுதிநீக்க நோட்டீஸூக்கு எதிராக நேற்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
போர்க்கொடிய தூக்கிய சச்சின் பைலட்டிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தொடர்பு கொள்ள முயற்சி செய்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன், சச்சின் பைலட் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். இதுகுறித்து, ப.சிதம்பரம் ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சச்சின் பைலைட் நேற்று முன்தினம் தன்னிடம் பேசியதாக கூறினார்.
அதில், தலைமை அவரை சந்திக்க விரும்புவதாக நான் மீண்டும் அவரிடம் தெரிவித்தேன். இந்த விஷயம் குறித்தும் விவாதித்துக்கொள்ளலாம். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு நான் அவருக்கு அறிவுறுத்தினேன் என்று அவர் கூறினார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…