Samajwadi Party Leader Akhilesh Yadav speech about Sengol Issue [File Image]
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்ட போது மன்னர் ஆட்சி காலத்தில் அந்த அவையில் ஆட்சியின் அடையாளமாக நிறுவப்பட்டு இருக்கும் செங்கோல் ஆனது , புதிய நாடாளுமன்ற கட்டத்திலும் நிறுவப்பட்டது. இதனை பிரதமர் மோடி நிறுவினார். இந்த செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி எம்பி கடிதம் எழுதி உள்ளார்.
சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சௌத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், மக்களவை சபாநாயகர் இருக்கையின் வலதுபுறம் செங்கோல் இருப்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இது ஜனநாயக ஆட்சி மன்னராட்சி நடைமுறை இங்கு இல்லை. செங்கோல் என்பது முடியாட்சியின் அடையாளம்.
நமது பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். அதில் செங்கோலை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்பின் பிரமாண்ட பிரதியை அதில் நிறுவலாம். என வலியுறுத்தி கடிதத்தை எழுதியுள்ளார் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சௌத்ரி.
இது பற்றி சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், பிரதமர் மோடி தலைவணங்கி செங்கோலை நிறுவி உள்ளதால் எங்கள் எம்பி அவ்வாறு சொல்லி இருப்பார். பிரதமர் பதவியேற்ற போது செங்கோலை வணங்க மறுத்துவிட்டார். அதனை ஞாபகப்படுத்த எங்கள் எம்பி இவ்வாறு கருத்து கூறியிருக்கலாம் என்றும், நாட்டை அரசியலமைப்பு சட்டம் மூலமே ஆள வேண்டும், செங்கோலை கொண்டு ஆட்சி செய்ய கூடாது என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
செங்கோல் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், செங்கோலை மக்களவையில் நிறுவி மத்திய அரசு விளையாடி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்ட போது ஒரு நாடகத்தை பாஜக உருவாக்கியது. செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்பி கூறியது ஒரு நல்ல ஆலோசனை என்று அவர் கூறினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…