கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி, மும்பை, ஹவுரா, அகமதாபாத் இடையே தினசரி இயங்கப்படும் சிறப்பு ரயில்களை வாரத்தில் ஒருமுறை இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி, மும்பை, சென்னை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு செல்லும் பயணிகள் விமானங்கள் திங்கள்கிழமை முதல் ஜூலை 19 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மேற்கு வங்க அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஹவுரா, டெல்லி, மும்பை, அகமதாபாத் இடையே தினசரி இயங்கப்படும் சிறப்பு ரயில்களை வாரத்தில் ஒருமுறை இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
பாட்னா வழியாக செல்லும் 02303/02304ஹவுரா – புது டெல்லி – ஹவுரா சிறப்பு ரயில் மற்றும் தன்பாத் வழியாக செல்லும் 02381/02382 ஹவுரா – புது டெல்லி – ஹவுரா சிறப்பு ரயிலும் ஜூன் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த இரண்டு சிறப்பு ரயில்களும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வாரத்தில் ஒரு முறை இயங்கும் என்று கிழக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இந்த இரண்டு ரயில்களும் ஹவுராவிலிருந்து ஜூலை 10 முதலும், புது டெல்லியிலிருந்து ஜூலை 11 முதலும் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…