வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இவை வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்றும்,நாளையும் அதிக மழை:
இதனைத் தொடர்ந்து,அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,இன்றும்,நாளையும் அந்தமான் நிகோபார் பகுதிகளில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும்,அதிக கனமழை காரணமாக அந்தமான் நிகோபார் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
எச்சரிக்கை:
மேலும்,அசானி புயல் உருவாகவுள்ள நிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால்,உடனடியாக கரை திரும்புமாறு மீனவர்களை,இந்திய கடலோர காவல்படை அறிவுறுத்தியுள்ளது.அந்த வகையில்,ஹெலிகாப்டர் மூலம் சென்று, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமானங்கள் ரத்து:
இந்நிலையில்,சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.புயல் எச்சரிக்கை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மார்ச் 22 ஆம் தேதி வரை மூடப்படுவதாலும், சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…