Manipur Chief Minister [File Image]
மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங்குக்கு சொந்தமான வீட்டை, முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டி அடித்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக பல மாதங்களாக கலவர சூழல் நிலவும் நிலையில், சில நாட்களுக்குமுன் அங்கு மைதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் இரு மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது, இந்த மாண்வர்களின் மரணத்தைக் கண்டித்து, சக மாணவர்கள் நடத்திய போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இன்றும் ஓயாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்பாலின் கிழக்குப் பகுதியான ஹெய்கங்கில், அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங்கிற்கு சொந்தமான வீட்டை நோக்கி ஏராளமானோர் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது, போலீசார் தடுத்த நிலையில், அங்கு பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது. முதலமைச்சரின் வீடு மீது தாக்குதல் நடத்த முயற்சியின் போது, வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி துரத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் மணிப்பூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அலுவலகத்திற்கு தீ வைத்தனர். அதே நாளில், மணிப்பூரின் பல மாணவர் அமைப்புகள் மணிப்பூரில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…