தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணையில் நீர் மின்நிலையம் உள்ளது.
இங்குள்ள 6 அலகுகளில் தலா 150 மெகாவாட் வீதம் மொத்தம் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், மின்நிலையத்தின் ஒரு பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று யூனிட் 4 இல் தீ விபத்து ஏற்பட்டது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக பேனல் போர்டுகள் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது 30 பேர் வேலை செய்து வந்துள்ளனர். விபத்து ஏற்பட்டதும் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்து காரணமாக கடும் புகை ஏற்பட்டுள்ளதால் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களில் 15 பேர் சுரங்க பாதை வழியாக தப்பி விட்டனர். 6 பேர் மீட்புக்குழுவின் மூலம் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் உதவி பொறியாளர்கள் உள்பட 9 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது, மீதமுள்ள 3 பேரின் உடல்கள் மீட்கும் பணி நடைபெற்றது.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…