Congress Bharat Jodo Nyay Yatra [file image]
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முன்னெடுத்த இந்திய ஒற்றுமை நடைபயணம் யாத்திரை வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
அசாமில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மிசோரமில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 6 பேர் காயம்!
அசாமில் யாத்திரை மேற்கொண்ட ராகுலுக்கு அம்மாநில முதல்வர் மூலம் கடுமையான இடையூறுகள் கொடுக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், தற்போது கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கவுகாத்தி எல்லையான கானாபுராவில் அசாம் மாநில போலீஸ் நூற்றுக்கணக்கானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேதாஜியின் 127வது பிறந்தநாள் : நடைப்பயணத்தில் ராகுல்காந்தி மரியாதை.!
இந்த சூழலில் ஆயிரக்கணக்கானோர் தொண்டர்களுடன், ராகுல் காந்தியை குவாஹாத்தி எல்லைக்குள் நுழைய விடாமல் அசாம் போலீஸ் தடுப்பதால், தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியின் பயணத்தை போலீஸ் தடுத்ததால், இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி நடத்தப்பட்டுள்ளது. அதுவும், ராகுல் காந்தி கண் முன்னே காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து ராகுல் காந்தி கூறியதாவது, கவுகாத்தியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து தான் பேசக்கூடாது என்பதற்காக தடுக்கப்படுவதாகவும், அமைச்சர் அமித்ஷா உத்தரவின்பேரில் அசாம் முதல்வர் தமது யாத்திரையை தடுப்பதாகவும் குற்றசாட்டியுள்ளார். இதனிடையே, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரிகைக்கு அசாம் மாநில காவல்துறை தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…