MH road [Image-ani]
மகாராஷ்டிரா நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் மீது டிரக் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உள்ள உணவகத்தில் நுழைந்ததில் ஏற்பட்ட விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 20பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து கூறிய காவல்துறை அதிகாரி, மத்திய பிரதேசத்தில் இருந்து துலே நோக்கி சென்று டிரக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் கூறிய போலீஸ் அதிகாரி, டிரக்கின் பிரேக் செயலிழந்ததால் அதன் ஓட்டுநர் ட்ரக்கின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார், அதன்பின் கட்டுப்பாட்டை இழந்த டிரக், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் இன்னோரு லாரியின் மீது மோதியது, இதையடுத்து டிரக் நெடுஞ்சாலையில் இருந்த ஓட்டல் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 10 பேர் பலி மற்றும் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், காயமடைந்தவர்கள் ஷிர்பூர் மற்றும் துலேயில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…
லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…