aptops - tablets [Image Source: wion]
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் ஆகியவற்றிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் எச்எஸ்என் 8741-ன் கீழ் வரும் சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதி புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததோடு, தடைசெய்யப்பட்ட இறக்குமதிகளுக்கான சரியான உரிமத்தை பெற்றுக்கொண்டால் அவற்றை இறக்குமதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழுதுபார்ப்பு மற்றும் மறு ஏற்றுமதி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நோக்கங்களில் கவனம் செலுத்துவதற்காக ஒரு சரக்குக்கு 20 பொருட்கள் இறக்குமதி உரிமத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், வெளிநாட்டில் பழுதுபார்க்கப்பட்ட பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்யும்போது, தடைசெய்யப்பட்ட இறக்குமதிக்கான உரிமம் பழுதுபார்ப்பதற்கும் பொருட்களை திரும்பப் பெறுவதற்கும் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.
இந்த சாதனங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வெளிநாட்டுச் சந்தைகளை நம்பியிருப்பதைக் குறைத்து, உள்ளூர் உற்பத்தித் திறன்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையில், இந்த மூன்று பொருட்களையும் உள்ளடக்கிய எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதிகள் 19.7 பில்லியன் டாலர்களாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 6.25 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், இந்தியாவில், கடந்து ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் தமிழ்நாடு முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 1.86 பில்லியன் டாலர்களிலிருந்து 5.37 பில்லியன் டாலராக ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய இறக்குமதி-ஏற்றுமதி (NIRYAT) மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…