தடுப்பூசி கையிருப்பு தகவல்களை மாநில அரசுகள் வெளியிடக்கூடாது – மத்திய அரசு தடை…!

Published by
Edison
  • கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில அரசுகள் வேறு எந்த நிறுவனத்துடனும்,பொதுத்தளங்களிலும் வெளியிட மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதனால்,அதிக அளவிலான மக்கள் ஆர்வத்துடன்கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

இதன்காரணமாக,தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது.மேலும்,மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் உள்ளது.இதனால்,பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில அரசுகள் வேறு எந்த நிறுவனத்துடனும், பொதுவெளியிலும் வெளியிட மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது.அதில்,

  • கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள்,பொதுத்தளங்களிலோ,வேறு எந்த நிறுவனத்துடனோ பகிரக்கூடாது.இது “சென்சிட்டிவ்” டேட்டா ஆகும்.
  • எனவே,அதை மத்திய அரசிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
  • ஏனெனில்,ஐக்கிய மேம்பாட்டு திட்டத்தின் உதவியுடன் இந்தியாவில் தடுப்பூசிகளின் இருப்பு,அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற தகவல்களை “இ-வின்” என்ற தளத்தில் மத்திய அரசு சேமித்து வைத்துள்ளது.
  • மாவட்ட அளவில் இருந்து தேசிய அளவு வரையிலான தடுப்பூசி கையிருப்பு குறித்த தகவல்களைக் கண்டறிய,”இ-வின்” என்ற இணையதள அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • மத்திய அரசுக்குச் சொந்தமான “இ-வின்” மின்னணு அமைப்பில், கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை மாநில அரசுகள் நாள்தோறும் பதிவேற்றம் செய்கின்றன.இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்த தகவல்களை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும்.
  • எனவே,”இ-வின்” மின்னணு அமைப்பில் உள்ள தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்றி எந்த நிறுவனத்துடனும் ஊடகங்களுடனும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஆன்லைனில் வெளியிடக் கூடாது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Edison

Recent Posts

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

1 hour ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

3 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

3 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

4 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

5 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago