கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும் என்று புதிய கல்வி கொள்கை அமல்படுத்தி ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக உரையாற்றினார். அவரது உரையில், புதிய கல்விக்கொள்கை மூலம் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம்.
எந்த இடத்துக்கு போனாலும் இந்த கால இளைஞர்கள் உச்சத்தை தொடும் வகையில் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. புதிய கல்விக்கொள்கையில் படிப்பவர்கள் எதிர்காலத்தை மிக தெளிவாக தீர்மானித்து கொள்வார்கள். புதிய இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை மிக முக்கியமான பங்களிப்பை வழங்கும்.
நமது குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் கல்விமுறை தான் நமது நாட்டின் எதிர்காலம். நமது இளைஞர்கள் மாற்றத்திற்காக முழுமையான அளவில் தயாராக இருக்கிறார்கள். கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும். புதிய கல்விக் கொள்கையை களத்திற்கு கொண்டு வர பலர் கடுமையாக பணியாற்றி உள்ளனர்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு நமது இளைஞர்கள் புதிய திசையை காட்டுகின்றனர். தேசத்தை கட்டமைப்பதில் புதிய கல்விக்கொள்கை மிகப்பெரிய பங்காற்றுகிறது. புதிய கல்விக்கொள்கை மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம் என்றும் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…