[Image source : The Hidu ]
கழிவுகளைமுறையாக அகற்றாத பீகார் மாநிலத்திற்கு 4000 கோடி ரூபாய் அபராதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயமான, NGTயானது பீகார் மாநில அரசுக்கு, திரவ மற்றும் திடக்கழிவுகளை அறிவியல் அபூர்வமாக அகற்ற தவறியதற்காக ரூ.4,000 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையினை கொண்டு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, “சட்டத்தின் உத்தரவை மீறி, திரவ மற்றும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்ற தவறியதற்காக, மாநில அரசுக்கு 4,000 கோடி ரூபாய் இழப்பீடு விதிக்கிறோம்.’ என உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி அபராத தொகையினை இரண்டு மாதங்களுக்குள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என நீதிமன்ற அமர்வு கூறியது.
இந்த தொகையை திடக்கழிவு பதப்படுத்தும் வசதிகள், மரபு கழிவுகளை சரிசெய்தல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STP) மற்றும் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்கள் (FSTP) அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…